பெரம்பலூரில், மனைவி இறந்த துக்கத்தில் குடிபோதையில் இருந்த போலீஸ், மகனும் பிரிந்து சென்றதால் தற்கொலைக்கு முயன்றவர் சாவு!

schedule
2021-12-16 | 05:42h
update
2021-12-16 | 05:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, a policeman who was drunk in mourning the death of his wife, tried to commit suicide as his son split up and died!

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள வீராக்கண் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செல்வராஜ் (வயது 50), இவர் பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல் நிலையத்தில், தலைமைக்காவலராக பணிபுரிந்து வருகிறார். பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் காவலர் குடியிருப்பில் மகள் சுபாஷினி (21), கருணாகரன் (16) ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரது மனைவி மாலதி கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த துக்கம் தாங்க முடியாமல் அடிக்கடி குடிபோதையில் வந்ததால் செல்வராஜீவிற்கும், அவரது மகன் கருணாகரனுக்கும் நேற்றிரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கருணாகரன் இனி வீட்டிற்கு வர மாட்டேன் என் கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே கோபித்து கொண்டு சென்றுள்ளார், அவரது மகள் சுபாஷினி வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார்.

Advertisement

இதனால் மேலும், மனமுடைந்த செல்வராஜ் குடிபோதையில் வீட்டின் பெட்ரூமில் உள்ள காற்றாடியில், வேஷ்டியால் தூக்கு மாட்டி கொண்டு இருந்துள்ளார். இதனை கவனித்த அவரது மகள் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் செல்வராஜை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 06:44:58
Privacy-Data & cookie usage: