பெரம்பலூரில், தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி

schedule
2021-08-17 | 14:37h
update
2021-08-17 | 14:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, a sample rehearsal program on precautionary measures to be taken during the southwest monsoon

பெரம்பலூர், புதிய பேருந்து நிலையத்தில், பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் தென்மேற்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ளபட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை சார்பில் கலெக்டர் வெங்கட பிரியா முன்னிலையில் நடைபெற்றது.

யணைப்புத்துறையின் மூலம் ஏரி, குளம் மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு (ஒரே சமயத்தில் 10 நபர்களை மீட்கும் திறன்கொண்டது), மீட்பு பணியின்போது 100 மீட்டர் சுற்றளவிற்கு வெளிச்சம் தரவல்ல உயர் கோபுர விளக்கு, உயிர்காக்கும் மிதவை மற்றும் உயிர்காக்கும் உடை (லைப் ஜாக்கெட்), இரும்பு பொருட்களை வெட்ட வல்ல ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி(ஸ்பெரட்டர் மற்றும் கட்டர்), மிதவை பம்பு (வெள்ள காலத்தில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற), விபத்து நேரங்களில் வாகனங்களின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்க உதவும் (ஏர் லிப்டிங்) ஆகிய பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு அவற்றின் இயக்கம் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement

தீயணைப்புத்துறையின் மூலம் விபத்து மற்றும் வெள்ள நேரங்களில் பொதுமக்களை காப்பாற்ற, தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத்துறையினர் மூலம் விபத்தில் நடக்க இயலாத நிலையில் உள்ளவரை விபத்து நடந்த இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு பல்வேறு முறைகளை பின்பற்றி அழைத்துச் செல்வது குறித்த செயல்விளக்கம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ப. ஸ்ரீவெங்கடபிரியா, இ.ஆ.ப. அவர்கள் பொதுமக்களிடம் வழங்கினார். நகராட்சி ஆணையர் ச.குமரிமன்னன், மற்றும் தீயணைக்கும் வீரர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 09:30:52
Privacy-Data & cookie usage: