பெரம்பலூரில், திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்ததால் இளம்பெண் தற்கொலை!

schedule
2020-08-24 | 05:33h
update
2020-08-24 | 05:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, a young woman commits suicide because she saw the groom for the wedding!

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் அவ்வையார் தெரு விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கலா (வயது 55), இருக்கு சிலம்பரசன் (வயது 34) ஜெயஈஸ்வரி (வயது 28) என்ற இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் சிலம்பரசனுக்கு சின்னபொண்ணு என்பவருடன் திருமணமாகி விட்டதாகவும்> தனது மகள் ஜெயஈஸ்வரிக்கு திருமணம் செய்ய வேண்டி மாப்பிள்ளை பார்க்கும் பொழுது தனக்கு திருமணம் வேண்டாம் என்றும் திருமணத்தில் தனக்கு இஷ்டம் இல்லை எனவும் ஜெயஈஸ்வரி கூறி வந்ததாகவும்கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் நேற்று மதியம் கலாவும் அவரது மகன் சிலம்பரசனும் ஜெயஈஸ்வரிக்கு மாப்பிள்ளை பார்க்க போகிறோம் நீ திருமணம் செய்து தான் ஆகவேண்டும் வயது ஏறிக்கொண்டே செல்கிறது எனக் கூறி கவுள்பாளையம் சென்றதாகவும் சிறிது நேரத்தில் சிலம்பரசன் மனைவி சின்னபொண்ணு போன் செய்து ஜெயஈஸ்வரி வீட்டில் உள்ள தனி அறையில் தூக்கு மாட்டி தொங்குவதாக தகவல் கூறியதாகவும், உடன் வந்து ஜெயஈஸ்வரியை கீழே இறக்கி பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டியபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் கூறியதாகவும், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டி தாய் கலா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.09.2026 - 03:19:44
Privacy-Data & cookie usage: