பெரம்பலூரில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம்!

schedule
2023-01-27 | 06:56h
update
2023-01-27 | 06:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
In Perambalur, AIADMK held a meeting for the martyrs of the language war!

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வானொலி திடலில், அதிமுக மாவட்ட மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு நன்றி செலுத்தும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இளம்பை.இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்தது. பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் என்.கே. கர்ணன், டி என் சிவப்பிரகாசம், எம். செல்வகுமார், பி.சசிகுமார், கே ரவிச்சந்திரன், கே எஸ் செல்வமணி, பேரூர் செயலாளர்கள் செந்தில்குமார், ரெங்கராஜ், கண்ணன், ஜாபர்அலி உள்ளிட்ட பலர் முன்னிலை வைத்தனர்.

Advertisement

முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான வரகூர் அ. அருணாசலம், தலைமை கழக பேச்சாளர்கள் கிருஷ்ணன் சேகர், முன்னாள் எம்பிக்கள் ஆர்பி மருதராஜா, மா சந்திரகாசி, மாவட்ட அவைத் தலைவர் குன்னம் குணசீலன், மாவட்ட இணை செயலாளர் எம். ராணி, மாவட்ட துணை செயலாளர் கு லெட்சுமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆர் ராஜேஸ்வரி,
மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம் என் ராஜாராம் உள்ளிட்ட பலர் சிறப்புரை ஆற்றினர். பல்வேறு அணிச் செயலாளர்கள், மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் புரட்சி தாசன் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 05:41:41
Privacy-Data & cookie usage: