பெரம்பலூர் அருகே காலாவாதியான போதை பான்பாராக்குகளை போலீசார் தீயிட்டு கொளுத்தினர்.

schedule
2016-12-03 | 17:30h
update
2026-09-16 | 11:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur at the police and set fire to expired panparag

பெரம்பலூர் கோனேரிப்பாளையம் அருகே உள்ள பைபாஸ் சாலையில் மர்ம நபர்கள் தடை செய்யப்பட்ட பான்பாராக்குகளை பண்டல் பண்டலாக வீசி சென்றனர். இதனை அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் சிலர் எடுத்து வைத்து விளையாடி கொண்டிருந்தனர்.

Advertisement

இத்தகவலை அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கிடந்த பான்பராக்கு பொட்டலங்களை கைப்பற்றி தீயிட்டு கொளுத்தினர்.

பின்னர், அங்கு காலாசதியான பொருட்களை வீசி சென்றது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், தடை செய்யப்பட்ட பான்பராக்குகளை கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து பெரம்பலூர் வழியாக அரியலூருக்கு கடத்தி வரும் நபரை கையும் களவுமாக பிடிக்க போலீசார் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.09.2026 - 11:56:30
Privacy-Data & cookie usage: