பெரம்பலூரில், கணவருடன் சேர்ந்து வாழ, தர்ணா போராட்டம் நடத்திய பெண் மீது தாக்குதல்: போலீசார் விசாரணை! !

schedule
2023-08-26 | 08:00h
update
2023-08-26 | 09:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, attack on a woman who staged a dharna protest to live with her husband: Police investigation! !

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை அருகே உள்ள பில்லாத்துறை சேர்ந்த ராமச்சந்திரன் – மகேஸ்வரியின் மகள் மங்கையர்கரசி (32), எம்.ஏ. பி.எட் பட்டதாரியான இவருக்கும், பெரம்பலூர் துறைமங்கலம், நியூ காலனி பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் பெருமாள் – கமலா தம்பதியரின் மகனாகிய வினோத் (38), சிவில் என்ஜினியர் என்பவருக்கும் கடந்த 2021 ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 13 பவுன் நகைகளும், வீட்டு உபயோகப் பொருட்களும், பைக் வாங்க ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணம் என சீதனமாக கொண்டு வந்துள்ளார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து ஒரு மாத காலம், குடும்பம் நடத்தி வந்த அவரது கணவர் வினோத் மற்றும் அவரது தாய் கமலா, தந்தை பெருமாள், சகோதரி செல்வி உள்ளிட்டோர் நாளடைவில் அவரை தகாத வார்த்தையால் திட்டி பேசியதாகவும், மேலும் வரதட்சணை கேட்டும், 8 மாதங்களுக்கு முன்பு வீட்டை, விட்டு துரத்தியதாகவும் மங்கையர்கரசி காவல் துறையில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் எண்ணத்தில் கணவரிடம் கேட்ட போது வர மறுத்துள்ளார். ஆனால், தனியாக வாடகை வீடு எடுத்து கொடுத்து விட்டு, பெரம்பலூர் ரோஸ் நகரில் உள்ள கணவர் அவரது தங்கை செல்வி வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தனியாக இருப்பதால், பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதால், இன்று காலை நேரில் சென்று, ரோஸ் நகரில் வசிக்கும் அவரது வினோத்தின் சகோதரி செல்வி வீட்டு வாசலில் கணவன் தன்னுடன் சேர்ந்து வாழ வரவேண்டும் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் தரப்பை சேர்ந்தவர்கள் கல்லால் மற்றும் செருப்பால் தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த மங்கையர்கரசி பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதிகக்கப்பட்டு, தலையில் 2 தையல் போடப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேர்ந்து வாழ தர்ணா போராட்டம் நடத்திய பெண்ணின் தாக்குதல் நடத்திய சம்பவம் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 01:48:57
Privacy-Data & cookie usage: