பெரம்பலூரில், மின்சாரம் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் வெங்கடபிரியா தொடங்கி வைத்தார்!

schedule
2022-12-20 | 14:34h
update
2022-12-20 | 14:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, awareness rally on electricity saving: Collector Venkatapriya inaugurates!

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், தேசிய மின் சேமிப்பு மற்றும் மின் சிக்கன வார நிறைவு விழாவை முன்னிட்டு ,பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் வெங்கடபிரியா, எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலையில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Advertisement

பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் 14.12.2022 முதல் 20.12.2022 வரை மின் சிக்கன வாரவிழா அனுசரிக்கப்பட்டது. அதனடிப்படையில், 14.12.2022 அன்று மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்ட மினி மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இறுதி நாளான இன்று மாலை, மின்வாரிய ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி புதிய பேருந்து நிலையம் வழியாக சென்று, பாலக்கரை வரை சென்று மீண்டும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை வந்தடைந்தது. இப்பேரணியில் பங்குபெற்ற அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். திரளான மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 13:18:26
Privacy-Data & cookie usage: