பெரம்பலூரில், அடிப்படை நீச்சல் கற்றுக்கொள்வதற்கான பயிற்சி முகாம்

schedule
2016-12-21 | 17:26h
update
2026-09-23 | 10:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, basic swimming training camp to learn

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைத்துள்ள நீச்சல் குளத்தில் 25.12.2016 முதல் 31.12.2016-ம் தேதி வரை 6 தினங்களுக்கு காலை, மாலை இருவேளையும் சிறந்த நீச்சல் பயிற்றுநரை கொண்டு 12 நீச்சல் பயற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

12 வகுப்புகளில் அடிப்படை நீச்சல் பயிற்சி முழுமையாக கற்றுத்தரப்படும். எனவே அரையாண்டு விடுமுறையில் மாணவ, மாணவிகள் அனைவரும் அடிப்படை நீச்சல் பயிற்சி கற்று பயன்பெறவும், உடல் திறனை மேம்படுத்தி சிறந்த நீச்சல் வீரர் – வீராங்கனைகளாக உருவாகவும், தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறவும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு நீச்சல் பயிற்றுநர் அன்பரசை 9965639606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.09.2026 - 10:25:22
Privacy-Data & cookie usage: