In Perambalur best Niladari awards on behalf of Rotary Club
விழாவிற்கு சங்கத் தலைவர் அம்பி கே.வி.என். கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் ரோட்டரி 3000-வது மாவட்டத்தின் வருங்கால ஆளுநர் மதுரை ஆர்.வி.என். கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருச்சி ஆடிட்டர் என்.மோகன் 26 பட்ட படிப்புகளை முடித்திருப்பதால் அவருக்கு நடமாடும் பல்கலைக்கழகம் என்ற பட்டம் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் சுயமுன்னேற்ற சிந்தனைகளை புத்தகங்களாக பதிப்பிற்கும் மதுரை நிக்கோலஸ் பிரான்சிஸ் கல்வி மற்றும் ஆளுமைச் சேவைக்கான விருதும், திண்டுக்கல் ராஜசேகருக்கு சிறந்த தொழில்முனைவோர் விருதும், கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் ரமேஷ் சிறந்த தொழிற்சேவை விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள் பாரத் கார்த்திக், வள்ளலார் அரவிந்தன், செயலாளர் செந்தாமரைக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
படவிளக்கம்:
ரோட்டரி விழாவில் திருச்சி ஆடிட்டர் என்.மோகனுக்கு, ரோட்டரி 3000-வது மாவட்டத்தின் வருங்கால ஆளுநர் மதுரை ஆர்.வி.என். கண்ணன் விருதுவழங்கி கவுரவித்தபோது எடுத்தப்படம். அருகில் சங்கத் தலைவர் அம்பி கிருஷ்ணன், செயலாளர் செந்தாமரைக்கண்ணன், பாரத் கார்த்தி உள்ளனர்.