பெரம்பலூர் : ஜன்னலை உடைத்து, 7 பவுன், ரூ.3 ஆயிரம் திருட்டு

schedule
2016-09-06 | 20:52h
update
2026-06-28 | 07:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur: broken window, 7 sovereing, Rs 3 thousand stolen

பெரம்பலூர், பெரம்பலூரில் பூட்டியிருந்த வீட்டில் ஜன்னல் கிரிலை பெயர்த்து 7 பவுன் தங்க நகை, 3 ஆயிரம் ரொக்க பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை முஸ்தபா நகரைச் சேர்ந்தவர்கள் முகமதுசித்திக்(44), ஜாஸ்மீன்(31), தம்பதியினர். இவர்களுக்கு கடந்த8 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்று ஷாகீனா(3) என்ற பெண் குழந்தை உள்ளது.

Advertisement

இதனிடையே கடந்த சில வருடங்களாக முகமதுசித்திக் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். குழந்தை ஷாகீனாவுடன் வசித்து வந்த ஜாஸ்மீன் கடந்த சனிக்கிழமை (1ந்தேதி) மதியம் வீட்டை பூட்டி விட்டு திருச்சியில் உறவினர் ஒருவர் வீட்டில் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று இரவு வீட்டை திறந்து பார்த்த போது ஹாலில் பக்க வாட்டில் உள்ள ஜன்னல் கிரில் பெயத்த்து தனியாக கீழே கிடந்துள்ளது.

மேலும் வீட்டினுள் உள்ள அறையில் ஒரு பிரோவில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகை, 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் களவு போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜாஸ்மீன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், பெரம்பலூர் போலீசார் எஸ்.ஐ.,க்கள் அகிலன், பிரேம்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று, தடயவியியல் நிபுணர்கள் மற்றும் துப்பறியும் நாய் உதவியுடன் ஆய்வு செய்து தடையங்களை சேகரித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

பொது மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த இந்த திருட்டு சம்பவம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட அப்பகுதி பொது மக்கள்அனைவரையும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 07:38:01
Privacy-Data & cookie usage: