In Perambalur car collision with a lorry near the college director Kills!
பெரம்பலூர் அருகே முன்னே சென்ற லாரி மீது பின்னால் வந்த கார் மோதியதில் திருச்சியை சேர்ந்த கல்லூரி செயலர் பலியானர் ! இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சகிச்சை பெற்று வருகின்றனர்.
அப்போது திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் திருமாந்துறை அருகே எதிர்பாராத விதமாக லாரியின் பின் பகுதியில் பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் திருச்சி காவேரி கலைக்கல்லூரி செயலர் சகாயராஜ் (வயது சுமார் 0) சம்பவ இடத்லேயே பரிதாபமாக உயிழந்தார்.
காரை ஓட்டி வந்த ரமேஷ் (வயது 40), காரில் பயணித்த மீரா (வயது 55), இருவரும் படுகாயம் அடைந்தவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்டு பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ரமேஷ், மீரா ஆகிய இருவரும் மேற்சிகிச்சைக்கா திருச்சி மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மங்கலமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.