பெரம்பலூர் அருகே கூலி தொழிலாளி ஜல்லி கிரசர் இயந்திரத்தில் சிக்கி பலி ! கை துண்டானது

schedule
2016-12-05 | 17:50h
update
2026-06-24 | 09:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur Chipseal crusher wage worker caught in the machine near the sacrifice! The hand fell

பெரம்பலூர் : திருச்சி மாவட்டம் டால்மியாபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (38) இவர் பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி – எறையூர் கிராமத்தில் இயங்கி வரும் செல்வகணபதி என்ற ஜல்லி அரைக்கும் கிரசரில் வேலை பார்த்து வருகிறார்.

Advertisement

செல்வராஜ் க.எறையூர் கிராமத்திலே தங்கி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயா (35) மற்றும் ஒரு பெண் குழந்தைகளுடன் டால்மியாபுரத்தில் வசித்து வருகிறார்.

செல்வராஜ் அந்த கிரசர் இயந்திரத்தில் ஆப்ரேட்டராக உள்ளார் வழக்கம் போல் நேற்று காலை வேலைக்கு சென்றுள்ளார் செல்வராஜ் அப்போது கிரசர் இயந்திரத்தை ஆன் செய்து மிஷின் அருகே சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராவிதமாக செல்வராஜின் இடது கை இயந்திரத்தினுள் மாட்டி துண்டானது இந்த விபத்தில் சம்பவ இடத்திலே செல்வராஜ் துடிதுடித்து இறந்தார்.

இந்த விபத்து குறித்து பேரளி கிராம நிர்வாக அலுவலர் பூர்ணிமா மருவத்தூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் செல்வராஜ் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிரசர் உரிமையாளர் நாமக்கலை சேர்ந்த வேலுசாமி என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 09:55:03
Privacy-Data & cookie usage: