பெரம்பலூரில் கணவன் தீக்குளித்ததில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்

schedule
2017-03-06 | 18:37h
update
2026-06-27 | 22:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur claiming there was doubt in her husband’s burnt commit suicide relatives blocked the road


பெரம்பலூர் அருகே கணவன் தீக்குளித்து இறந்ததில் சந்தேகம் இருப்பதாக கூறி மனைவி மற்றும் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூரை சேர்ந்தவர் பூமாலை (வயது 37), இவர் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் அரும்பாவூரில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்தார். வெளிநாடு சென்று வந்த பூமாலைக்கும், மனைவி ராஜேஸ்வரிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பூமாலை தனது சொந்த ஊரான எளம்பலூருக்கு வந்த அவர் நேற்று இரவு தீக்குளித்த அவர் இறந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த ராஜேஸ்வரி கணவனை காண மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது பூமாலையின் உறவினர்கள் அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் பெரம்பலூர் துறையூர் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் கால் மணி நேரத்திற்கும் மேலாக போக்கு பாதிக்கப்பட்டது

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 22:27:15
Privacy-Data & cookie usage: