In Perambalur condemning farmers roadblock near the village officials speaking disrespectfully
பெரம்பலூர் அருகே வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மத்திய அரசின் நிவாரணம் பெற பதிவு செய்ய சென்ற விவசாயிகளை கிராம நிர்வாக அதிகாரி தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவதாக குற்றம் சாட்டி பொது மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மத்திய அரசின் நிவாரண உதவித்தொகை பெற தமிழகம் முழுவதும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் பேரளிகிராமத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பதிவு செய்ய சென்றுள்ளனர். ஆனால் கிராம நிர்வாக அதிகாரி வராததால் கடந்த 5 நாட்களாக பதிவு செய்யாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கிராம நிர்வாக அதிகாரி இன்று வருவார் என கிராம உதவியாளர் நாகராஜ் காத்திருந்த அனைத்து விவசாயிகளுக்கும் டோக்கன் வழங்கியுள்ளார். மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு அலுவலகம் வந்த கிராம நிர்வாக அதிகாரி பூர்ணிமா, பதிவு செய்ய காத்திருந்த விவசாயிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதுடன், பணி
செய்யாமல் அலட்சியம் காட்டியுள்ளார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த பேரளி கிராம விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்கள், கிராம நிர்வாக அதிகா£ளை கண்டித்தும், நிவாரண உதவித்தொகை பெற பதிவு செய்ய நாளை கடை நாள் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், விஏஓவின் அலட்சியத்தால் சுமார் 25க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளதாகவும், வேதனை தெரிவித்து பெரம்பலூர் – அரியலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த குன்னம் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, அனைத்து விவசாயிகளும் பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு செய்தனர்.
பேரளி கிராமத்தில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் சார்பில் நடைபெற்ற இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
#Perambalur News