பெரம்பலூரில், சித்த மருத்துவ பிரிவிற்கு ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிட கட்டும் பணி: கலெக்டர் கற்பகம், எம்.எல்.ஏ பிரபாகரன் தொடங்கி வைத்தனர்.

schedule
2024-02-09 | 15:27h
update
2024-02-09 | 15:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, construction of a new building at a cost of Rs 25 lakh for Siddha Medical Unit: Collector Karpagam, MLA Prabhakaran inaugurated

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், சித்த மருத்துவ பிரிவிற்கு ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் கற்பகம், எம்.எல்.ஏ பிரபாகரன் தொடங்கி வைத்தனர். பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள் நோயாளிகள், வெளிநோயாளிகள் பிரிவு, தீவிர அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, மகப்பேறு உள்பட பல்வேறு பிரவுகள் தனித்தனியாக இயங்கி வருகிறது.

Advertisement

சித்த மருத்துவ பிரிவிற்கு தனி கட்டடம் வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் சித்த மருத்துவ பிரிவிற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் என்.ராஜேந்திரன், நகராட்சித் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.மாரிமுத்து, சித்த மருத்துவ அலுவலர் ஜாகாகுலின்சித்ரா, சித்த மருத்துவர்கள் விஜயன், செந்தமிழ்செல்வி, நகராட்சித் துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் மற்றும் ஒப்பந்ததாரர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 18:15:05
Privacy-Data & cookie usage: