பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று; இன்று 27 பேர் கண்டறிப்பட்டதால் எண்ணிக்கை 132 ஆக உயர்வு!

schedule
2020-05-12 | 18:42h
update
2020-05-12 | 18:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur district, 27 more people are affected by coronavirus today and the number is 132

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 3,600க்கும் மேற்ப்பட்ட நபர்களுக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதில் 4 வயது சிறுவன், சிறுமி, ஒரு தலைமை காவலர், ஒரு தீயணைப்பு வீரர், 6 கர்ப்பிணிப் பெண்கள், ஒரு கல்லூரி மாணவர் மற்றும் கோயம்பேடு தொடர்புடைய 85 பேர் உள்ளிட்ட 105 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது (நேற்று வரை) உறுதி செய்யப்பட்டு, அவர்கள் திருச்சி மற்றும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 7 பேர் மட்டும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.

Advertisement

இந்நிலையில் சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் என பரிசோதனை மேற்கொண்டவர்களில், 10க்கும் மேற்ப்பட்ட கர்பிணி பெண்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத¬னையடுத்து வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட 27 பேரும் தனித்தனி ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105லிருந்து 132 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 132 பேரில் சென்னை கோயம்பேடு தொடர்புடையவர்கள் 89 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள ஆய்வில் மீதமுள்ள 100 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வு முடிவுகள் கிடைக்கப்பெற்றால் பாதிப்பு எண்ணிக்கை இன்றும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.09.2026 - 06:38:58
Privacy-Data & cookie usage: