பெரம்பலூர் மாவட்டத்தில், பணிபுரியும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

schedule
2020-11-25 | 06:55h
update
2020-11-25 | 06:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur District, Call for Applicants Eligible for the AMMA Bike Subsidy Scheme for Working Women

பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கட விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம்- அல்லது வாகனத்தின் மொத்த தொகையில் 50 சதவீதம் தொகை இரண்டில் எது குறைவோ அத்தொகையை அரசு மானியமாக வழங்கப்படும்.

Advertisement

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.31 ஆயிரத்து 250 வழங்கப்படும். 125 சிசி-க்கு குறைவான கியர்லெஸ் வாகனத்தை பயனாளிகள் தங்களது சொந்த நிதியில் இருந்தோ, வங்கி கடன் அல்லது கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்தோ கடன் பெற்று வாங்கலாம். மானியம் பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
பயனாளிகள் 18 முதல் 45 வயது உள்ளவராகவும் விண்ணப்பிக்கும் பொழுது இரு சக்கர வாகன ஓட்டுநர், பழகுநர், உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மானியத்தொகை போக இருசக்கர வாகனத்தின் மீதத் தொகை செலுத்த விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

மேலும், அமைப்புசார் மற்றும் அமைப்புச்சாரா நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள், சுயமாக சிறு தொழில் செய்யும் பெண்கள், அரசு சுய நிதி உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசுத் திட்டங்கள், சமூக அடிப்படை நிறுவனங்கள், ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், மகளிர் கற்றல் மையம் ஆகிய நிறுவனங்களில் தொகுப்பூதியம், தினக்கூலி அல்லது ஒப்பந்த ஊதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் மகளிh;கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள், விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். குறிப்பாக பயனாளிகளுக்கு கல்வி தகுதி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அனைத்து பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்திடுமாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.06.2026 - 01:09:01
Privacy-Data & cookie usage: