In Perambalur district, DMK youth team membership opening ceremony at every house!

பெரம்பலூர் மாவட்டத்தில், இல்லம்தோறும் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை தொடக்க விழா, மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில், எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சி.ஆனந்தகுமார் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்த்தல் முகாமை தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் நகரத்தில் துறைமங்கலம் 3 ரோடு பகுதியில் இளைஞர் அணி புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்
குன்னம்,சி.இராஜேந்தின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

மாநில இளைஞரணி துணைசெயலாளர் சி.ஆனந்தக்குமார் கலந்து கொண்டு,இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர்கள் சேர்த்தல் முகாமை துவக்கி வைத்தார். அதேபோல் குரும்பலூர், வேப்பந்தட்டை , கிருஷ்ணாபுரம், நாரணமங்கலம், கொளக்காநத்தம், குன்னம்,சு.ஆடுதுறை, ஆகிய இடங்களில் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்த்தல் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், இரா.ப.பரமேஷ்குமார்,வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், தங்க.கமல்,வ.சுப்ரமணியன்ஆர்.அருண், மா.பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!