பெரம்பலூர் மாவட்ட அளவிலான அரசு ஊழியகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

schedule
2017-02-16 | 19:04h
update
2026-06-20 | 20:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur district-level sports competition for state employees
அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் இன்று மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதில் தடகளப்போட்டிகள் மற்றும் குழு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் கல்வித்துறை, வருவாய் துறை, சுகாதாராத் துறை, செய்தி மக்கள் மற்றும் தொடா;புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆண்கள் 180 நபர்கள் மற்றும் பெண்கள் 150 நபர்கள் என மொத்தம் 320 நபர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கான தடகளப்போட்டிகளில் 100 மீ ஓட்டப்போட்டியில் பெரம்பலூர்அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த எம்.அலெக்ஸாண்டர் முதலிடத்தையும், 200 மீ ஓட்டப் போட்டியில் பீல்வாடி அரசு உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த வி.ராஜா முதலிடத்தையும்,

800 மீ ஓட்டப் போட்டியில் வருவாய்த் துறையைச் சேர்ந்த எம்.கண்ணன் முதலிடத்தையும், 1500 மீ ஓட்டப்போட்டியில் தொண்டமாந்துறை அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த அ. அன்புசெல்வன் முதலிடத்தையும், நீளம்தாண்டுதல் போட்டியில் லப்பைகுடிக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த கே. ரகுபதி முதலிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் நீதித்துறையைச் சேர்ந்த அ. யேசுபாலன், முதலிடத்தையும் பெற்றனர்.

Advertisement

பெண்களுக்கான தடகளப்போட்டிகளில் 100 மீ ஓட்டப்போட்டியில் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியில் ரஞ்சன்குடி ஊராட்சி ஒன்றியப் பள்ளியைச் சேர்ந்த என்.மேகலா முதலிடத்தையும், 200 மீ மற்றும் 800மீ ஓட்டப் போட்டியில் காரை ஆர்.சவீதா-சத்துணவு- முதலிடத்தையும், 400மீ தொடர் ஓட்டப் பந்தயப் போட்டியில் காரை அரசு மேல்நிலைப்பள்ளி, சத்துணவு அமைப்பாளர் எஸ்.பிரபாவதி முதலிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் வருவாய்த்துறையைச் சேர்ந்த எம்.ரேணுகாதேவி முதலிடத்தையும் பெற்றனர்.

ஆண்களுக்கான கையுந்துப்பந்து போட்டியில் பெரம்பலூர் கல்வித் துறையைச் சார்ந்த அணியினர் முதலிடத்தையும், பெண்களுக்கான கையுந்துப்பந்து போட்டியில் கல்வித் துறையைச் சார்ந்த அணியினர் முதலிடத்தையும், ஆண்களுக்கான மேஜைப்பந்து ஒற்றையர் பிரிவில் கல்வித் துறையைச் சேர்ந்த அணியினர் முதலிடத்தையும்,

ஆண்களுக்கான மேஜைப்பந்து இரட்டையா; பிரிவில் கல்வித் துறையைச் சேர்ந்த அணியினர் முதலிடத்தையும், ஆண்களுக்கான இறகுப்பந்து போட்டியில் கல்வித் துறை அணியினர் முதலிடத்தையும், பெண்களுக்கான இறகுப்பந்து போட்டியில் கல்வித் துறை அணியினர் முதலிடத்தையும், பெண்களுக்கான மேஜைப்பந்து ஒற்றையர் பிரிவில் கல்வித் துறையைச் சேர்ந்த அணியினர் முதலிடத்தையும், ஆண்களுக்கான மேஜைப்பந்து இரட்டையர் பிரிவில் கல்வித் துறையைச் சேர்ந்த அணியினர் முதலிடத்தையும், ஆண்களுக்கான கபாடி போட்டியில் கல்வித் துறை அணியினர் முதலிடத்தையும், ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் கல்வித் துறை அணியினர் முதலிடத்தையும், கூடைப்பந்து போட்டியில் கல்வித் துறை அணியினர் முதலிடத்தையும் பிடித்தனர்.

இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலார் ம.இராமசுப்பிரமணியராஜா, பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கைப்பந்து பயிற்றுநர்ஆர்,வாசுதேவன், உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு முன்பாக விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் கணேசன் சிறப்புரை நிகழ்த்தினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.06.2026 - 20:29:24
Privacy-Data & cookie usage: