பெரம்பலூரில், மாவட்ட  அளவிலான வாலிபால் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார் அமைச்சர் சிவசங்கர்

schedule
2022-06-10 | 05:48h
update
2022-06-10 | 05:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, district level volleyball tournament: Minister Sivasankar presented prizes to the winning teams.


பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் சார்பில், மாவட்ட அளவிலான ஆண்கள் வாலிபால் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. போலீஸ் எஸ்.பி ச.மணி – மாவட்ட ஊராட்சி சேர்மன் ராஜேந்திரன் தொடங்கி வைத்தனர். செயலாளர் எஸ்.அதியமான் வரவேற்றார். பொறியாளர் பரமேஷ்குமார் தலைமை வகித்தார்..ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செ.செங்குட்டுவன், பொருளாளர் ந.செல்லப்பிள்ளை, துணை தலைவர்கள் ப.செந்தில்நாதன், தழுதாழை பாஸ்கர், க.அஸ்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில் முதலாவதாக வெற்றி பெற்ற சு.ஆடுதுறை‌ அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம், கேடயம், இரண்டவதாக வெற்றி பெற்ற தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி அணிக்கு ரூ.8 ஆயிரம் ரொக்கம், கேடயம், மூன்றாவதாக வெற்றி பெற்ற கொளக்காநத்தம் அணிக்கு ரூ.6 ஆயிரம் ரொக்கம்,கேடயம் மற்றும் நான்காவதாக வெற்றி பெற்ற மாஸ் அணிக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் ‌ஆகியவற்றை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழக முதல்வர், கிராமப்புற மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு கிடைத்து, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனும் நோக்கில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் விளையாட்டு அரங்கம் அமைக்க அறிவித்துள்ளார். தமிழகத்தில் செஸ் ஒலிம்பியா போட்டி சென்னையில் நடைபெறுகிறது‌. விளையாட்டுக்கென தமிழக முதல்வர் அவர்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்று பேசினார்.

மாவட்ட கழக செயலாளரும் – மாவட்ட ஊராட்சி குழு தலைவருமான குன்னம் சி.இரா‌ஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாவட்ட வாலிபால் அசோசியேஷன் இணைச் செயலாளர்கள் து.ஹரிபாஸ்கர், வி.எஸ். தமிழ்செல்வன், கே.சிவரஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், சேலம் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் பொறுப்பாளர் சண்முகவேல், பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.அண்ணாதுரை, வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சி.ராஜேந்திரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன்.சம்பத், துணை அமைப்பாளர் தம்பை.தர்மராஜ், வேப்பந்தட்டை ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ், சிவகாமம் மோட்டார்ஸ் மேலாளர் துளசி, பீல்வாடி ராமச்சந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போட்டியில் முதலாவதாக வெற்றி பெற்ற சு.ஆடுதுறை அணியும், இரண்டாவதாக‌ வெற்றி பெற்ற தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி அணியும், வருகிற 11 மற்றும் 12- ம் தேதி மயிலாடுதுறையில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் பங்கு பெறுகின்றனர்‌. இதில் கொண்ட அனைத்து அணிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 20:47:07
Privacy-Data & cookie usage: