பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று உள்ளாட்சி இடைத்தேர்தல் : விறுவிறுப்பான வாக்குப் பதிவுடன் நடக்கிறது!

schedule
2022-07-09 | 08:27h
update
2022-07-09 | 08:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur district, the local body by-elections are happening today with brisk voting!

Picture taken as women queue up to vote in Melapuliyur in Perambalur District

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Advertisement

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்புலியூர் கிராம ஊராட்சி தலைவர், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிலிமிசை கிராம ஊராட்சி வார்டு எண் 4 மற்றும் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய வி களத்தூர் கிராம ஊராட்சி வார்டு எண் 7 உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்து வருகிறது .

வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில், தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்: 380 பகுதி-2, பிரிவு-1, நாள் 07.07.2022 ன்படி இன்று அரசு பொது விடுமுறை நாளாகவும், அப்பகுதியில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம் பொதுத்துறை நிறுவனம் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி நிலவரப்படி மேலப்புலியூர் கிராம்தில் உள்ள 5505 வாக்காளர்களில் 2010 பேர்கள் வாக்களித்தனர். இது 36.51 சதவீதம். தொடர்ந்து வாக்குப் பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 02:23:52
Privacy-Data & cookie usage: