பெரம்பலூர் மாவட்டத்தில், மதுவிலக்கு குற்றப் பிரிவு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்!

schedule
2021-02-20 | 08:17h
update
2021-02-20 | 08:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur district, vehicles seized in anti-alcohol offenses cases are up for public auction!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடைமைக்கப்பட்ட வாகனங்களை 27.02.2021ஆம் தேதி காலை 10.00மணி முதல் ஆயுதப்படை வளாகம், தண்ணீர்பந்தல், பெரம்பலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் (மதுவிலக்கு) முன்னிலையில் 33 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 02 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 35 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.

Advertisement

பெரம்பலூர் அரியலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமல்பிரிவு, பெரம்பலூர; மாவட்ட அலுவலகத்தினை நேரிலோ அல்லது 9498104778 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

பொது ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் ரூ.1,000 வைப்புத்தொகை செலுத்தி தங்களது பெயர் முகவரியை பதிவு செய்து கொள்ள வேண்டும். மதுவிலக்கு குற்றவழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 27.02.2021ஆம் தேதி காலை 10.00 மணியளவில் ஆயுதப்படை வளாகம், பெரம்பலூரில் பொது ஏலத்தில் விடப்படும். ஏலத்தில் கலந்து கொள்பவருக்கு அடையாள எண் கொண்ட வில்லை வழங்கப்படும். பதிவு செய்து கொண்டவர;கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளலாம், அவருடன் பிறருக்கு அனுமதியில்லை. வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவர் ஏலத்தொகையுடன் ஜி.எஸ்.டி-யும் சேர்த்து பிற்பகல் 03.00மணிக்குள் உரிய அலுவலரிடம் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும், வைப்புத்தொகை கழித்துக்கொள்ளப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர் உரிய தொகையை செலுத்த தவறினால் வைப்புத்தொகை திருப்பிதரப்படமாட்டாது. ஏலம் ரூ.100ன் மடங்கில்தான் கேட்கப்பட வேண்டும். வாகனத்துடன் வாகனம் ஏலத்தில் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும், வாகனத்தின் பதிவு சான்று வழங்க இயலாது. ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும்.

பொது ஏலத்தில் காவல்துறை சார்ந்த எவரும் கலந்து கொள்ள அனுமதியில்லை. வாகனங்களை 25.02.2021 அன்று காலை 10.00 மணி முதல் பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை தவறாமல் கொண்டு வர வேண்டும். எனவே ஏலத்தில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 02:42:30
Privacy-Data & cookie usage: