பெரம்பலூர் அருகே கேஸ் சிலிண்டர் டியூப் வெடித்ததால் தீ விபத்து

schedule
2017-01-12 | 16:37h
update
2026-06-03 | 09:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur fire exploded near a gas cylinder tube

பெரம்பலூர் அருகே சமையல் கேஸ் சிலிண்டரின் டியூப் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை அருகே அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் மகன் சிக்கன்(வயது 37) விவசாயி.இவர் தனது குடும்பத்துடன் அதே ஊரில் வசித்து வருகிறார். இன்று மாலை இவரது வீட்டில் சமைப்பதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளனர்.அப்போது கேஸ் சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் டியூப் வெடித்து அதில் இருந்து தீப்பற்றியுள்ளது.இது குறித்து தகவல் தெரிந்த அக்கம்பக்கத்தினரும் பெரம்பலூர் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறுவதை தடுத்து தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தால் எவ்வித சேதமும் இல்லை. இது குறித்து வி.களத்தூர் போலீசாரும் வருவாய் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.06.2026 - 09:25:24
Privacy-Data & cookie usage: