பெரம்பலூரில், அரசு சார்பில் வங்கி அலுவலர் முதனிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

schedule
2020-08-19 | 15:45h
update
2020-08-19 | 15:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, Free Training Classes for Bank Officer Primary Examination on behalf of the Government

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

தற்போது வங்கி அலுவலர் முதனிலை தேர்வு அக்டோபர் மாதம் 3, 10, 11 – ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு ibpsonline.ibps.in என்ற இணையதளம் மூலமாக ஆக.26க்குள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகின்ற ஆக.25 காலை 10.00 மணி முதல் இணையவழி செயலி மூலமாக பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படும். மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரத்தினை deo1perambalur@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9499055913, 04328 – 225352 என்ற தொலைபேசி வாயிலாகவும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தங்களுடைய வாட்ஸ்அப் தொலைபேசி எண்ணை பதிவு செய்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.09.2026 - 03:34:29
Privacy-Data & cookie usage: