பெரம்பலூரில் பட்டதாரி ஆசிரியர் கழக 43ம் ஆண்டு பரிசளிப்பு விழா

schedule
2017-02-26 | 12:11h
update
2026-09-16 | 14:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur graduate teacher at the 43 th Annual Awards Ceremony

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கூட்டரங்கில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 43ம்ஆண்டு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.


பெரம்பலூரில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 43ம் ஆண்டு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்டத் த லைவர் ராம மூர்த்தி தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் ராஜ்குமார், மாவட் டப் பொருளாளர் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் சுமதி, மாநிலத்தலைவர் இளங்கோவன் ஆகியோர் பேசினர்.

Advertisement

மாநில சிறப்புத் த லைவர் சுப்ரமணியன், மாநிலப் பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் ஜான் உபால்ட், மாநில அமைப்புச் செயலாளர் இந்திரா நேரு, உள்ளிட்டோர் பேசினர். விழாவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் 85பேர், பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் 14 பேர், ஓய்வு பெறும் ஆசிரியர்கள் 16பேர், 100 சதவீதத் தேர்ச்சி பெற்ற 31 பள்ளிகள், 100 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுத் தந்த பாட ஆசிரியர்கள் 413 பேர் என அனைவருக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன. விழாவில் பெரம்பலூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் பாலமுருகன், மாவட்ட துணைத் தலைவர்கள் மணி, கணேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.09.2026 - 14:09:21
Privacy-Data & cookie usage: