#In Perambalur Group 1 exam is taking place in a free training class
இப்பயிற்சி வகுப்புகள் மூலம் பயின்று பலரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2016-2017 ஆம் ஆண்டு திட்ட அறிக்கையின்படி தொகுதி 1-இல் அடங்கியுள்ள Deputy Collector, Deputy Superintendent of Police, Assistant Commissioner(C.T), District Registrar, District Employment Officer, District Officer, (Fire and Rescue Service) உள்ளிட்ட 85 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே மேற்படி தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர்கள் பங்கு கொண்டு வெற்றி பெறும் நோக்கில் தொகுதி 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு 01.12.2016 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி அரங்கில் நடத்தப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள் இளைஞிகள் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் விண்ணப்பம் செய்த நகலுடன் (ஆன்லைன் பிரின்ட்அவுட்) கடவுச்சீட்டு அளவு புகைப்படம், சுய விவர குறிப்பு மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம், என தெரிவிக்கப்பட்பட்டள்ளது.