பெரம்பலூரில் கடும் பனிமூட்டம்: வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே சென்றன.

schedule
2017-02-22 | 05:25h
update
2026-09-23 | 12:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur heavy fog

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 9.30 மணி வரை நீட்டித்த பனிமூட்டத்தால் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி வாகனங்கள் சென்றன.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் காலை 9.30 மணி வரை நீட்டித்த பனிமூட்டத்தால் மாவட்டம் முழுவதும் ஊட்டி கொடைக்கானல் போன்று இதமான தட்ப வெப்பநிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருவ மழை தவறியதால் மாவட்டம் முழுவதும் பனிப் மூட்டம் இன்று காலை அதிகரித்தது. இரு சக்கர வாகன ஓட்டிகள், மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வொர்கள் எதிரே வருபவர்கள், வரும் வாகனங்களை அறிந்து சிரமப்பட்டனர். இதமான தட்பவெப்பநிலை நிலவியதால் மகிழச்சி அடைந்துள்ளனர், இன்று காலை சுமார் 9.30 மணி மேல் வரை நீடித்த பனிமூட்டம், பின்னர், சூரிய வெளிச்சத்தால் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. ஏ.சி. இல்லாத லாரி, பஸ் போன்ற வாகன ஓட்டிகள், மகிழ்ச்சியுடன் வாகனங்களை ஓட்டி சென்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.09.2026 - 12:43:50
Privacy-Data & cookie usage: