In Perambalur, higher education guidance program for students will be held tomorrow. Call the Collector;

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ்”கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை காலை 09.00 மணி முதல் மாலை 03.30 மணி வரை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இதில் பல்வேறு துறைகளில் உயர் கல்வி படிப்பு சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் குறித்த வழிகாட்டுதல் அரங்குகள் இடம் பெறுகின்றன. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் (ம) தொழில் பயிற்சி நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியில் பங்குகொண்டு தங்களது கல்லூரிகளில் மாணவ மாணவியர்கள் மேற்படிப்பை, விருப்பமுள்ள பாடங்களை தேர்ந்தெடுத்து பயில்வதற்கான வழிகாட்டல் அரங்குகள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளன. அரசுத் துறைகளில் வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வினை எதிர்கொள்வது குறித்தும் போட்டி தேர்வின் முக்கியத்துவம் குறித்தும் அரசுத் துறை சார்பில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் உரையாற்ற உள்ளார்கள்.

மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் இணையதளம் மூலம் விண்ணப்பதிற்கான விழிப்புணர்வு குறித்தும் கூட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன. மேலும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் கூட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன.
பொதுத்துறை வங்கிகளில் உயர்கல்விக்கான கல்விக்கடன் பெறுவது தொடர்பான வழிக்காட்டுதல்களும் கல்விக்கடன் பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்படவுள்ளன.

மேலும், இந்நிகழ்ச்சியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளும் விதத்தில் மாவட்டத்தில் அனைத்து இடத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகைத்தர பேருந்து வசதியும், மதிய உணவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, அனைத்து மாணவ மாணவிகளும் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் முறையாகப் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!