பெரம்பலூரில், மற்றொரு வீட்டில், ரூ. 6 லட்சம் மதிப்பிலான நகைகள் பட்டப்பகலில் கொள்ளை!

schedule
2023-12-17 | 13:20h
update
2023-12-17 | 13:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, in another house, Rs. Jewels worth 6 lakhs stolen in broad daylight!

பெரம்பலூர் கோல்டன் சிட்டி நகரை சேர்ந்தவ சீனிவாசன் மனைவி புவனேஸ்வரி (46), கணவன்-மனைவி இருவரும், நேற்று, திருச்சி மாவட்டம், நெய்க்குளம் கிராமத்தில், உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, இன்று மாலை 4 மணியளவில், வீட்டிற்கு திரும்ப வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டினுள் பீரோவில் இருந்த சுமார் ரூ. 6 லட்சம் மதிப்பிலான 13 3/4 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.2000 ஆயிரம், திருடு போய் இருப்பது. தெரிய வந்தது.

Advertisement

இது குறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அருகில் இருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்து செய்து வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், இன்று மதியம் சுமார் 2.40 மணியளவில், இச்சம்பவம் நடந்து இருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில். தீவிரமான ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.08.2026 - 21:48:56
Privacy-Data & cookie usage: