பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் ஆக.30-ல் நடக்கிறது.

schedule
2016-08-24 | 14:58h
update
2026-06-28 | 03:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur In Aug.30 district-level monthly tournaments happening.

மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் ஆக. 30 அன்று காலை 8.30 மணி முதல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ – மாணவிகளுக்கு தடகளம், நீச்சல், கையுந்துபந்து மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

Advertisement

இப்போட்டியில் தடகளப் பிரிவில் 100 மீ ஓட்டம், 600 மீ ஓட்டம், 2,000 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல். கையுந்துபந்து மற்றும் கூடைப்பந்து, நீச்சல் (Swimming 50m, 100m, 200m, 400m, free Style 50 m- Back Storke 50 m,50m- Breast Stroke, 50 m- Butterfly Stroke, 200m Individual medley ஆகிய போட்டிகள் மாணவஃமாணவிகள் என இருபாலருக்கும் நடைபெற உள்ளது.

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. எனவே, அனைத்து பள்ளி, மாணவ, மாணவிகளும் மேற்கண்ட போட்டிகளில் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், என மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 03:23:05
Privacy-Data & cookie usage: