பெரம்பலூர் ஏரியில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணி அரிமா சங்கம் சார்பில் தொடக்கம்

schedule
2016-10-21 | 15:26h
update
2026-06-27 | 12:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur lake Prosopis juliflora to remove trees from lions Club

பெரம்பலூரில் உள்ள பெரியஏரி, வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியில் சீமைக்கருவேல் மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளது.

நீர்நிலையில் மழைநீர் தேங்குவதால் பாதிப்பிற்கு உள்ளாகும், இயற்கைக்கு எதிராக உள்ள சீமைகருவேல் மரங்களை பொக்ளின் எந்திரத்தை கொண்டு வேருடன் அகற்றும் திட்டம் அரிமா சங்கம் மற்றும் கட்டிட கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் இன்று தொடங்கப்பட்டது.

Advertisement

முதல்கட்டமாக பெரம்பலூர் பெரிய ஏரியில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் தொடக்க நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் மோகன்ராஜ் சீமைக்கருவேல் மரங்கள் அகற்றும் பணியை தொடங்கி வைத்தார். இதில் அரிமா சங்க நிர்வாகிகள் பாபு, மகாதேவன்,முரளி, கட்டிட் கட்டுமான பொறியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 12:58:15
Privacy-Data & cookie usage: