பெரம்பலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து : ஒருவர் பலி : 6 பேர் படுகாயம்

schedule
2016-08-17 | 10:24h
update
2026-06-28 | 03:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur lost control near the accident tractor accident: Driver killed, 6 injured

பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் கிராமத்திலிருந்து அனுக்கூர் கிராமத்திற்கு வெங்காயம் ஏற்ற இன்று காலை எசனை அருகே உள்ள இரட்டை மலை சந்து பகுதியில் சாலையில் வந்து கொண்டிருந்த டிராக்டர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

இந்த விபத்தில் தப்பி குதிக்க முயன்ற டிராக்டர் ஓட்டுனரான அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ரமேஷ்குமார்(வயது – 30) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வெங்காய மூட்டைகளை ஏற்ற டிராக்டரில் பயணித்த தொழிலாளர்கள் அம்மாபாளையத்தை சேர்ந்த தனசேகர், சுரேஷ், சுந்தர்ராஜன், சரவணன் உட்பட 6 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 03:24:31
Privacy-Data & cookie usage: