பெரம்பலூரில் பாத்திரக்கடை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.5 லட்சம் மதிப்பலான நகைகள் திருட்டு

schedule
2016-12-03 | 06:18h
update
2026-06-15 | 14:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, metal shop in the employee’s home, break of Rs. 1.5 Lac jewelry theft

பெரம்பலூரில் பனிமூட்டத்தை பயன்படுத்தி பாத்திரக்கடை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 1.5 லட்சம் மதிப்புள்ள நகை நள்ளிரவில் நடந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர், எளம்பலூர் சாலை முத்து நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் ரவி(வயது 46), இவர் தனியார் பாத்திரக்கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று கடை வேலை காரணமாக சேலம் சென்றிருந்தார். அவரது மனைவி செல்வகாமாட்சி சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.

Advertisement

இந்நிலையில் பெரம்பலூர் நகரில் நடா புயலால் ஏற்பட்டிருந்த கடுமையான பனிமூட்டம், மற்றும் குளிரால் பொதுமக்கள் நேற்று வழக்கத்திற்கு முன்பே வீடுகளில் முடங்கினர்.

சேலம் சென்றிருந்த ரவி நள்ளிரவு வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்ப இடத்திற்கு, கைரேகை மற்றும், தடயவியல் நிபுணர்களுடன் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், வீட்டினுள் இருந்த பிரஸ்லெட், மோதிரங்கள், குழந்தைகளுக்கு அணிவிக்கப்பட் வளையல்கள் தோடு, மூக்குத்தி, கம்மல்கள் என ரூ.1லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 6 பவுன் நகைகள் திருடு போய் இருந்தது.

பெரம்பலூர் நகரில் அக்கம்பக்கம் பக்கத்தினர் குடியிருக்கும் போதே வீட்டினுள் திருடர்கள் கொள்ளையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 14:07:32
Privacy-Data & cookie usage: