பெரம்பலூர் நகராட்சி குப்பை கிடங்கிற்கு மர்ம நபர்கள் தீவைப்பு : தீயணைப்பு வீரர்கள் அணைக்க தீவிர முயற்சி!

schedule
2017-02-17 | 13:19h
update
2026-06-27 | 07:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur municipal garbage depot, unidentified persons fired: Firefighters try to extinguish the extreme!

பெரம்பலூர் நகராட்சி குப்பை கிடங்கு தீப்பற்றி எறிவதால் அப்பகுதி குடியிறுப்பவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Advertisement

பெரம்பலூர் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கிற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பற்றி எரியும் தீயை அணைக்க பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் 4 தண்ணீர் வண்டிகளுடன் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். பற்றி எரியும் தீயால் உருவாகியுள்ள புகையால் தீரன் நகர் பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களும், அருகே உள்ள தனியார் பள்ளி மாணவர்களும் அப்பகுதியில் இருந்து உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் தேவைக்கு தனியார் கிணறுகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் எடுத்து வந்து தீ மீது செலுத்தி வருகின்றனர். தீ கட்டுக்குள் வர குறைந்த பட்சம் 3 மணி நேரமாவது ஆகும் என தீயணைப்பு வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 07:07:12
Privacy-Data & cookie usage: