பெரம்பலூர் அருகே தீக்குளித்த பெண் சாவு

schedule
2016-11-17 | 17:59h
update
2026-06-15 | 07:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur near burning the woman dead

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள துங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மனைவி தேவி (வயது 35). தேவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, தண்ணீர் எடுத்து வந்த போது தவறி விழுந்ததில், ஒரு கை முறிந்தது. மேலும் தேவிக்கு அவரது உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

Advertisement

இதனால் கணவன் மனைவிக்கும் அடிகடி தகராறு ஏற்பட்டதாக கூறபடுகிறது இதே போல் சம்பவத்தன்று நேற்று கணவன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தேவி வீட்டில் யாரும் இல்லாத போது உடலில் மண்ணென்னைய் ஊற்றி பற்ற வைத்து கொண்டார். அவர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து அவரை உடனடியாக சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தேவி இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த தேவிக்கு திருமணம் 15 ஆண்டுகள் ஆகின்றது. இரு மகன்கள் உள்ளனர். இது தொடர்பாக தேவியின் தாயார் செல்லமாள் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சப் இன்ஸ்பெக்டர் ஜவஹர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 07:43:17
Privacy-Data & cookie usage: