In Perambalur near, fell into the well at the death of the mother of 3 children in family dispute
இதனால் மனமுடைந்து காணப்பட்ட கலைச்செல்வி இன்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து நல்லத்தம்பி மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடினர். அப்போது ஊருக்கு அருகில் ஊராட்சிக்கு செந்தமான கிணற்றில் கலைச்செல்வி பிணமாக மிதந்தது கொண்டு இருப்பது தெரிய வந்தது.
தகவலறிந்த கை.களத்தூர் காவல் நிலையத்தினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த கலைச்செல்விக்கு அருள்பாண்டி(8), அருள்பிரகாஷ்(6), அருள்வருணன்(4) என்ற 3 குழந்தைகள் உள்ளனர் குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கை.களத்தூர் காவல் நிலையத்தினா வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.