பெரம்பலூர் அருகே விபத்து : மினி பஸ் கண்டக்டர் பலி!

schedule
2017-03-05 | 15:56h
update
2026-06-25 | 13:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur near mishap kills mini bus conductor!

பெரம்பலூர் அருகே உள்ள மேலப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாவலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் சேகர் (வயது 27), மினி பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று மாலை லாடபுரம் கிராமத்தை சேர்ந்த சுதாகர் என்பவருடன் எசனை கிராமத்திற்கு வந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர், இரட்டைமலை சந்து சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலையின் ஓரத்தில் இருந்து கல் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் நிலைகுலைந்த மோட்டர் சைக்கிள் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

Advertisement

இதில் மோட்டர் சைக்கிளை ஓட்டி வந்த சுதாகர் படுகாயம் அடைந்தார். பின்னாள் அமர்ந்து வந்து சேகர் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறிதது தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயமடைந்த சுதாகரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேகரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 13:55:56
Privacy-Data & cookie usage: