பெரம்பலூர் அருகே காரின் டயர் வெடித்தது : லாரி டிரைவரின் சாமர்த்தியத்தால் 5 பேர் உயிர் தப்பினர்.

schedule
2017-02-16 | 14:40h
update
2026-06-06 | 13:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur near the car’s tire burst: 5 people, by virtue of the truck driver survived.

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே தேவையூரில் இன்று காலை சுமார் 11.30 மணியளவில் காரும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், திருவட்டத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (42) விவசாயி, இவர் தனது குடும்பத்தாருடன் ஒரே காரில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அருகே உள்ள திருப்பட்டுரில் உள்ள பிரம்மா கோயிலுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தேவையூர் அருகே கார் வந்து கொண்டு இருந்த போது திடிரென முன்பக்க டயர் வெடித்தது. இதில் நிலைகுலைந்த கார் சாலையில் தாறுமாறாக மெதுவாக சென்றது. அப்போது காரை தொடர்ந்து பின்னே வந்த தனியார் கல்லூரிக்கு சொந்தமான குடிநீர் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கார் மீது மோதும் நிலை ஏற்பட்டது. சுதாகரித்து கொண்ட தண்ணீர் லாரி டிரைவர் பெரியசாமி (வயது 47) சமயோசிதமாக காரின் மீது லேசாக உரசியயுடன் லாரியை அருகில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி லாரியை நிறுத்தினார்.

Advertisement

இதில், இதில் காரில் பயணம் செய்த கண்ணன் (42) சிதம்பரம், கண்ணன் மனைவி கொடியரசி (36) கண்ணன் மகன் கபிலன் (13) பழனிவேல் மனைவி சுதா (26) மற்றும் செல்லமுத்து மனைவி நாகம்மாள் (55) ஆகியோர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

இது குறித்த தகவல் அறிந்த வந்த மங்களமேடு போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமயோசிதமாக செயல்பட்டு லாரியை நிறுத்திய பெரியசாமியை அப்பகுதியில் சென்றவர்கள் பராட்டி சென்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 13:16:20
Privacy-Data & cookie usage: