பெரம்பலூர் அருகே சாலையை கடக்க முயன்ற செவிலியர் மீது கார் மோதியது : படுகாயம்

schedule
2016-07-30 | 21:33h
update
2026-09-01 | 03:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur nurse injured, who tried to cross the road near the car bumped,

பெரம்பலூர் அருகே சாலையை கடக்க முயன்ற செவிலியர் மீது கார் மோதியது : படுகாயம்

பெரம்பலூர் அருகே சாலையை கடக்க முயன்ற செவிலியர் கார் மோதி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் வனிதா(வயது. 30), செவிலியரான இவர் பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் பகுதியிலுள்ள ஒரு தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் மருத்துமனைக்கு எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற வனிதா மீது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக சென்ற கார் எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வனிதா தலை, முகம், கை ஆகிய இடங்களில் காயமடைந்து அவர் பணியாற்றும் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வனிதாவின் உறவினரான காமராஜ்(46) அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சென்னை கொளத்தூரைச் சேர்ந்த நந்தா(38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 03:21:45
Privacy-Data & cookie usage: