பெரம்பலூரில், சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்

schedule
2018-02-15 | 14:07h
update
2018-02-15 | 14:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, nutrition workers staged a picket demanding the demands.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக தொடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அரசு தராப்பில் அலட்சியம் காட்டுவதால் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் அறிவித்ததையொட்டி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Advertisement

மாவட்ட தலைவர் பொன்.ஆனந்தராசு தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை 5லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும், சமையலர், உதவியாளர், அமைப்பாளர், ஆகியோருக்கு தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 350 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர், விடுவித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 22:43:57
Privacy-Data & cookie usage: