In Perambalur petition the municipality to take no action at all Empty pots for women to protest the siege

மனு கொடுத்தும் குடிநீர் வினியேகாம் செய்ய நடவடிக்கை எடுக்காத பெரம்பலூர் நகராட்சி ஆணையரை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பெரம்பலூரில் பருவ பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வசதி உள்ளவர்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்கு நகராட்சி வாகனங்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆலம்பாடி சாலையில் உள்ள சமத்துவபுரம் கிராம மக்களுக்கு முறையாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட வில்லை எனவும், அதனால் தங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி கடந்த பத்து நாட்களுக்கு முன்பு நகராட்சி ஆணையாளர் முரளியிடம் மனு கொடுத்து இருந்தனர். ஆனால், மனுவை பெற்றுக் கொண்ட ஆணையாளர் முரளி தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்துள்ளார்.

இதனைக் கண்டித்து சமத்துவபுரத்தில் வசித்து வரும் மக்கள் இன்று ஒன்று திரண்டு நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். கடந்த 20 நாட்களாக அப்பகுதியில் தண்ணீர் வினியோகம் செய்ய வில்லை என்றும், மேலும், கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக காவிரி குடிதண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!