பெரம்பலூரில், கர்ப்பிணி பெண் தூக்குமாட்டி தற்கொலை!

schedule
2018-12-16 | 16:56h
update
2018-12-16 | 17:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, pregnant woman committed suicide: Police and Revenue Dept. Investigation

பெரம்பலூரில் கர்ப்பிணி பெண் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

Advertisement

பெரம்பலூர்- எளம்பலூர் சாலையில் ராமர்பிள்ளை காலனியைச் சேர்ந்தவர் செல்வகாந்த் (வயது 41). இவரது மனைவி சாந்தி (32). இவர்களுக்கு திருமணமாகி ஆறரை ஆண்டுகளாகிறது. ஏற்கனவே 2 முறை கர்ப்படைந்த சாந்திக்கு, கருகலைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியாக சாந்தி இருந்தார். இன்று காலை செல்வகாந்த் வெளியே சென்றுவிட்டு, மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது தூக்குமாட்டி சாந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தந்தை பெருமாள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். மேலும் கோட்டாச்சியர் விஸ்வநாதனும், விசாரணை நடத்தி வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.06.2026 - 01:02:39
Privacy-Data & cookie usage: