In Perambalur. Private Job fair: Appointment orders were issued to 600 persons

பெரம்பலூரில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 600 நபர்களுக்கு கலெக்டர் (பொ) சி.ராஜேந்திரன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இணைந்து ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 600 நபர்களுக்கு கலெக்டர் (பொ) சி.ராஜேந்திரன், அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ. ஆர். தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் பணி நியமன ஆணைகளை வழங்கிய போது தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் 60,902 நபர்கள் படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். பல்வேறு உயர் படிப்புகள் படித்தும் வேலை வாய்ப்பின்றி உள்ள இளைய சமுதாயத்தினர் பலரின் துயர் தணிக்கும் வண்ணம், தமிழக அரசின் சார்பில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தொழில் வளத்தினை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும் என்பதற்காக சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம், தமிழகத்தில் இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பினை மாண்புமிகு அம்மா அவர்களது அரசு உருவாக்கியுள்ளது. அதுமட்டுமல்ல, அரசின் பல்வேறு துறைகளிலும் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

சுயமாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு ஊக்கம் அளித்து, உரிய கடனுதவியை செய்து தருகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமென்ற அடிப்படையில், இன்றையதினம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் மற்றும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை சிறப்பாக நடத்தி, 600 நபர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கான பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் நடைபெற்ற தனியார;துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 3,125 நபர;கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலம் டி.என்.பி.எஸ்.சி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு, காவலர் தேர்வு போன்ற தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி தோ;வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்; கடந்த ஆண்டுகளில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியினால் 115 நபர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணியில் உள்ளனர். மேலும், தமிழக அரசின் ஆணைப்படி போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்களுக்காக அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலம் பாடங்கள் மெய்நிகர் கற்றல் என்ற திட்டத்தின் மூலம் கற்பிக்கப்படுகிறது. எனவே, போட்டித் தேர்வுகள் எழுதும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால், வழங்கப்படும் இத்தகைய இலவச பயிற்சியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வாராந்திர நிகழ்ச்சியாக தினந்தோறும் ஒவ்வொரு தலைப்பின்கீழ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழக அரசின் ஆணைப்படி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி ஏற்கனவே வழங்கி வந்த உதவித் தொகையினை 2017 ஆம் ஆண்டு முதல் மாண்புமிகு அம்மா அவர்களது அரசு இரட்டிப்பாக்கி வழங்கி வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் 15,268 பயனாளிகள் உதவித் தொகை பெற்று பயன் பெற்று உள்ளனர். அது போன்று வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கான உதவித் தொகையையும் தமிழக அரசு இரட்டிப்பாக்கி வழங்குகிறது. அவ்வகையில் 1,025 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு உதவித் தொகை அம்மா அவர்களது அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

பட்டப் படிப்பு, முதுகலைப் படிப்பு, பொறியியல் படிப்பு உட்பட பல்வேறு படிப்புகளைப் படித்துவிட்டு, எவ்வித வேலையும் இன்றி, மன உளைச்சலோடு பல வருடங்களாக காத்திருந்த பலருக்கு இன்றையதினம் பல்வேறு நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன. இன்றையதினம் பணி நியமன ஆணைகள் பெற்ற உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பணியாணை பெற்ற நீங்கள் உங்களது முழு திறமையையும் பயன்படுத்தி, நேர்மையான முறையில் உங்களது நிறுவனங்களில் பணிபுரிந்து, நற்பெயர் பெறுவதோடு மட்டுமல்ல, மென்மேலும் உயர்பதவிகளைப் பெற்று வாழ்க்கையில் அனைத்து வகைச் செல்வங்களையும் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மு.முரளிதரன், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ம.சிவசுப்பிரமணியம், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் ந.செல்வகுமார், க.கவிதா, க.செங்கதிர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!