பெரம்பலூரில், சாலை பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டம்!

schedule
2023-02-19 | 15:06h
update
2023-02-19 | 15:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, road workers union general meeting!

பெரம்பலூரில் நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு கோட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது.

மாவட்ட இணை செயலாளர் மணிவேல், மாவட்ட துணை தலைவர் ராமநாயகம், மாவட்ட இணை செயலாளர் ராஜி, மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர் பழனிசாமி, மாநில துணை தலைவர் சிங்கராயன், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி கூறி வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் குமரிஆனந்தன், கூட்டுறவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் சிவக்குமார் உட்பட பலர் பேசினர்.

Advertisement

கூட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலைப்பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்குரிய ஊதிய மாற்றம் ரூபாய் 5,200/-, ரூ.20,200/- தர ஊதியம் ரூபாய் 1900 வழங்க வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்தவரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் விரைந்து வழங்க வேண்டும்.

நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியார் பராமரிக்கும் ஒப்பந்த நடைமுறையை கைவிடப்படுவதாக அறிவித்திருந்தாலும் சாலையினை புதுப்பிக்கும் ஒப்பந்ததாரோ 5 ஆண்டு பராமரிக்க அனுமதிக்கும் நடைமுறையை கைவிட்டு அரசே சாலை பராமரிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும்.

சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10% ஆபத்து படி மற்றும் சீருடை சலவை படி வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக மாவட்ட துணை தலைவர் ராஜா வரவேற்றார். மாவட்ட பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 04:17:09
Privacy-Data & cookie usage: