பெரம்பலூரில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் : ரூ.100 கோடி பண பரிவர்த்தனை முடங்கியது

schedule
2017-02-28 | 14:29h
update
2026-06-24 | 02:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur strike by bank employees: Rs 100 crore cash transaction stalled

பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து ஏடிஎம் மையங்களும் உடனடியாக திறக்கப்பட்டு முழுமையாக செயல்பட வேண்டும்.

வங்கிகளில் உள்ள வாராக்கடன் பெயர்பட்டியல் வெளியிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் 56 வங்கிகள் இன்று இயங்கவில்லை. இதில், அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் என மொத்தம் சுமார் 500 பேர் இன்று வேலை நிறுத்த்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக வங்கிப் பணிகள் பாதிக்க்பபட்டு சுமார் நூறு கோடி ரூபாய் அளவிற்கு பண பரிவர்த்தனை முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 02:52:33
Privacy-Data & cookie usage: