பெரம்பலூரில், நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரின் 4 சக்கரங்கள் திருட்டு : கொள்ளையர்கள் கைவரிசை

schedule
2017-11-21 | 05:20h
update
2017-11-21 | 05:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, the 4-wheeled luxury car’s theft: robbers

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட மதனகோபலபுரம் 11 வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ராஜு மனைவி ஜெயலட்சுமி (வயது 47). இவருக்கு சொந்தமான காரை அவரது கணவர் வீட்டின் அருகே நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டனர். இன்று காலை வந்து பார்த்த போது கார் கவர் போட்டு மூடியிருந்ததால் கார் சக்கரங்கள் அப்படியே இருக்கிறது என சென்று விட்டார். சற்று நேரத்திற்கு பிறகு கார் கவரை எடுத்த போது தான், காரின் நான்கு சக்கரங்களும் களவு போயிருப்பது தெரிய வந்தது.

Advertisement

இது குறித்து காரின் உரிமையாளர் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணயைில்,
நள்ளிரவில் வந்த கொள்ளையர்கள் காருக்கு ஜாக்கி வைத்து ஒவ்வொரு சக்கரமாக கழற்றியதும், அப்போது காரை சுற்றிலும், காலி பேட்டரி பாக்ஸ், கருங்கல், செங்கல், ஆகியவை முட்டுக் கொடுத்து சாவகாசமாக 4 சக்கரங்களை கழற்றி சென்றுள்ளனர் என்பதும் தெரிய வந்தது.

இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு, செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைபோன கார் சக்கரங்களின் மதிப்பு ரூ. 60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 08:36:40
Privacy-Data & cookie usage: