பெரம்பலூரில், தீவிபத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு அரசுக்கு முன்பாக நிவாரண உதவி வழங்கிய அதிமுகவினர்!

schedule
2022-06-13 | 14:37h
update
2022-06-13 | 15:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, the AIADMK provided relief aid to those who lost their homes in the fire before the government!

படவிளக்கம்: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் நிவாரண உதவிகள் வழங்கிய போது எடுத்தப்படம்.

பெரம்பலூர் நகராட்சியில் 15 வது வார்டை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த கோவிந்தராஜ், மற்றும் இவரது மகன்கள் செல்வராஜ், ரமேஷ் ஆகிய மூவரின் வீடும் அருகருகே உள்ளது. இன்று காலை கூலி வேலைக்கும், ஆடு மேய்க்கவும் சென்று விட்டனர். இந்நிலையில், திடீரென இன்று காலை சுமார் 10 மணி அளவில் தீ பற்றி எறிந்தது. அக்கம்பகத்தினர் ஓடி வந்து தண்ணீரை இறைத்து தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த துணிமணிகள், தட்டுமுட்டு சாமான்கள் தீயில் எறிந்து நாசமானது.

Advertisement

இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் எம்.செல்வகுமார், பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி, ஆகியோர் தீவிபத்தில் பாதிப்படைந்த குடும்பத்தினரை நேரில் சத்தித்து ஆறுதல் தெரிவித்து, பாதிப்படைந்த ஒவ்வொரு வீட்டினருக்கும், தலா ரொக்கம் ரூ.10 ஆயிரம், ஒரு சிப்பம் அரிசி, துணிமணிகள் உள்ளிட்ட சுமார் ரூ. 50 ஆயிரத்திற்கும் மதிப்புள்ள நிவாரண உதவிகளை தனது சொந்தப் பணத்தில் வழங்கினர். அப்போது ஒன்றிய கவுன்சிலர் அருணாபாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

ஆனால், அரசு சார்பில் வருவாய்த்துறையினர் வீடு எறிந்தது குறித்து நேரில் வந்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய நிவாரண பொருட்களை இன்று மாலை வரை வழங்கவில்லைஎன அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

https://paypal.me/kaalaimalar?country.x=IN&locale.x=en_GB

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 21:14:26
Privacy-Data & cookie usage: