பெரம்பலூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண் படுகொலை : போலீசார் விசாரணை

schedule
2017-01-11 | 08:50h
update
2026-06-27 | 18:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur The girl was sleeping in the house near the murder: police

பெரம்பலூர் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை படுகொலை செய்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள தெரணி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மனைவி விசாலாட்சி (வயது 63). இவர் இன்று காலை விடிந்தும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

Advertisement

இது குறித்து பாடாலூர் போலீசார் தகவல் தெரிவித்தன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாலாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்தனர். நகை பணத்திற்காக விசாலாட்சியை கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில், விசாலாட்சியின் செல்போனை கைப்பற்றிய போலீசார் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருகே அருகே வீடுகள் இருந்தும், அதிகம் மக்கள் வசிக்கும் பகுதியிலேயே கொலை நடந்த சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழத்தி உள்ளது. இறந்து போன விசாலாட்சிக்கு செல்வம், செல்வக்குமார், ராஜேந்திரன் என்ற 3 மகன்களும், திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 18:08:14
Privacy-Data & cookie usage: