பெரம்பலூரில், இந்திய இராணுவத்தின் ஜெய்பாரத் ராட்சச பலூன் சாகச நிகழ்ச்சி : ஆட்சியர் தகவல்

schedule
2018-12-20 | 08:14h
update
2018-12-20 | 08:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, the Jeybarat balloon fly adventure of the Indian Army: Collector’s Information

Model: Image Copyright Indian Army


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

Advertisement

இந்திய ராணுவத்தில் பயிற்சி பெறும் இராணுவ வீரர்களால் ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஜெய்பாரத் எனும் ராட்சச பலூனில் பறந்து செல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த சாகச பயணமானது கடந்த நவம்பர் 6ம் தேதி ஜம்முவில் துவங்கி இந்தியா முழுவதும் உள்ள 31 முக்கிய நகரங்கள் வழியாக கன்னியாகுமரி வரை செல்ல உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் ஒருபகுதியாக மேற்படி இராணுவ வீரர்களின் இராட்சச பலூனில் வந்து செல்லும் நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை டிச. 21. வெள்ளிக்கிழமை , மாலை 4.00 மணியளவில் இராட்சச பலூனில் தாழ்வாக பறந்து செல்லும் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மேற்படி சாகச நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய மாணவர் படையினர் திரளாக கலந்து கொள்ள உள்ளனர். அதுசமயம் பொதுமக்களும் கலந்து கொண்டு மேற்படி சாகச நிகழ்ச்சியினை கண்டு களிக்கலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.07.2026 - 07:45:16
Privacy-Data & cookie usage: