பெரம்பலூரில், மெயின் சுவிட்டை ஆப் செய்து விட்டு வீட்டிற்கு புகுந்த திருடன் 6 பவுன் தாலிக்கொடி பறித்துக் கொண்டு ஓட்டம்!

schedule
2022-06-10 | 19:35h
update
2022-06-10 | 19:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur, the thief who turned off the main switch and entered the house snatched the 6 pound palm flag and ran away!

பெரம்பலூர், வெங்கடேசபுரம் அன்னை நகரை சேர்ந்தவர் சாமிதுரை (42). அகரம்சிகூரில் உள்ள கனரா வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவரது சங்கீதா, மகள் ஹரினி (14), ஹரிகரன் (14) என குழந்தைகள் உள்ளனர், குழந்தைகள் இருவரும் திருவிழாவிற்காக தம்பை கிராமத்திற்கு சென்றுவிட்டனர்.

Advertisement

இந்நிலையில் இன்று இரவு 7.15 மணியளவில் வீட்டில் தனியாக சங்கீதா மட்டும் இருந்தார். இதனை பார்த்த அடையாளம் தெரியாத மர்ம நபர் வீட்டின் மெயினை ஆஃப் செய்துவிட்டு ஒருவர் வீட்டிற்குள் வந்து மறைந்து நின்று கொண்டான்.

சங்கீதா திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் வீட்டுக்கு வெளியே வந்தர். அப்போது பின்னாலிருந்த மர்ம நபர் சங்கீதா கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தாலிக் கொடியை பறித்து கொண்டு, TN 46 X 8411 என்ற பதிவெண் கொண்ட Hero Duet ஸ்கூட்டியில் தப்பிச்செல்ல முயன்றான். சங்கீதா கூக்குரலை கேட்ட வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணகுமார்(49) ஓடிவந்து ஸ்கூட்டியை பிடித்து கீழே தள்ளியதும் ஸ்கூட்டியை மர்மநபர் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டான். சுமார் 3 பவுன் தாலி கொடியை சங்கீதா கையிலேயே பிடித்துக் கொண்டார். மீதமுள்ள 6 பவுன் தங்க சங்கலியுடன் தப்பினார்.

இது குறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் வீட்டில் உள்ள பெண்களை அச்சமடைய செய்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 20:49:53
Privacy-Data & cookie usage: